வறட்சியால் பாதிக்கப்பட்ட சோளப்பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

எலச்சிபாளையம் ஒன்றியம் 67.கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– 67.கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 900 ஏக்

Update: 2016-12-31 23:00 GMT

நாமக்கல்,

எலச்சிபாளையம் ஒன்றியம் 67.கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– 67.கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 900 ஏக்கரில் சோளப்பயிர் சாகுபடி செய்துள்ளோம். வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் சோளப்பயிர் முழுவதும் காய்ந்து போய்விட்டது. மேலும் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் சோளப்பயிர்களுக்கு பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளோம். எனவே நாமக்கல் மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து, காய்ந்து போன்ற சோளப்பயிர்களுக்கு நஷ்டஈடாக முழுமையான காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மனுகொடுக்க வந்த அவர்கள் காய்ந்துபோன சோளப்பயிர்களை கொண்டு வந்து இருந்ததால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்