அம்மா திட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிறுகலூர், ஆணைக்கல்லனூர், கே.வேட்ரப்பட்டி கிராமங்களில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அம்மா திட்ட முகாம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சிறுகலூர் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்

Update: 2016-12-31 23:00 GMT

அரூர்,

சிறுகலூர், ஆணைக்கல்லனூர், கே.வேட்ரப்பட்டி கிராமங்களில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்மா திட்ட முகாம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சிறுகலூர் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ரே‌ஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆணைக்கல்லனூர்

இதேபோன்று பென்னாகரம் ஒன்றியம் ஆணைக்கல்லனூர் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் மாரிமுத்து தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி முகாமிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் அரூர் உதவி கலெக்டர்ட கவிதா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 95 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமில் தனி தாசில்தார் சித்ரா, வருவாய் ஆய்வாளர் ரமணி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், கிராம சுகாதார செவிலியர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்