தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் கடன் நிலுவை வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். மேலும் அவர்களது;

Update: 2016-12-31 21:30 GMT

விருத்தாசலம்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் பாலக்கரையில் கடன் நிலுவை வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். மேலும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை வசூல் செய்ய வேண்டும். பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் வங்கியில் வரிசையில் காத்திருக்கும் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஒவ்வொருவரின் ஜன்தன் வங்கி கணக்கில் தலா ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு புகழேந்தி தலைமை தாங்கினார். தெய்வசிகாமணி, கணேசன், கங்கையம்மாள், ஆறுமுகம், அம்புஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு ராஜசங்கர், மாவட்டக்குழு விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் தனவேல், மாநில குழு வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்