விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் நேற்று போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் டோல்கேட் பகுதி, ஆயில்மில் பகுதி, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை போன்ற பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர;

Update: 2016-12-30 23:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் நேற்று போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் டோல்கேட் பகுதி, ஆயில்மில் பகுதி, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை போன்ற பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தது மற்றும் சாலை விதி முறைகளை மீறியது கண்டு பிடிக்கப்பட்டது. 4 சக்கர வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகள் 110 பேருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்