குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது குதிரைகள், வாகனங்கள்- பணம் பறிமுதல்

குளித்தலை அருகே குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து குதிரைகள், வாகனங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். குதிரை பந்தயம் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை கீழப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குதிரை பந்தயம்(ரேக்ளா ரேஸ்) பணம் கட்டி நடப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பி

Update: 2016-12-30 23:21 GMT
குளித்தலை அருகே குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து குதிரைகள், வாகனங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

குதிரை பந்தயம்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை கீழப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குதிரை பந்தயம்(ரேக்ளா ரேஸ்) பணம் கட்டி நடப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று அதிகாலை தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆர்.டி.மலை ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குதிரை பந்தயம் நடத்துவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் மாயி என்பவரின் தலைமையில் குதிரை பந்தயம் நடந்தது தெரியவந்தது. மேலும் பந்தயத்தில் கலந்து கொள்ள முன்பணம் செலுத்தியதும், குதிரைகள் மீது பணம் கட்டி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விளையாடியதும், தெரியவந்தது.
30 பேர் கைது

இது குறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட மாயி(வயது32), திலீப்(24), பாலா(29), சையதுசுல்தான்(27), ஆறுமுகம்(40), பாரிவள்ளல்(35), சக்திவேல்(30), சாதிக்(51), ராஜபாண்டியன்(25), முகமதுயாசர்அராபாத்(28), பாஸ்கர்(32), நவீன்பாபு(25), பீர்முகமது(26), சுந்தரபாண்டி(26), செல்வம்(40), பாண்டி(29), சிவசந்திரன்(32), விவேகா னந்தன்(22), தங்கமுத்து(46), மணிகண்டன்(29), மகேந்திரன்(47), மாரிமுத்து(25), அம்மாசி(30), அருண்குமார்(23), கவுரிசங்கர்(32), பிரபு(28), அஜீத்துல்லா(24), செந்தில் குமார்(42), சங்கர்(45), லோகேஷ்(22) ஆகிய 30 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 குதிரைகள், 2 கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள், 6 சரக்கு வேன்கள், 4 குதிரை பூட்டும் வண்டிகள், ரூ.7 ஆயிரத்து 530 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்