பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை

பிரதமர் மோடியை கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். பிரதமருடன் சந்திப்பு கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமா

Update: 2016-12-30 22:21 GMT

பெங்களூரு

பிரதமர் மோடியை கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடன் சந்திப்பு

கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்–மந்திரி சித்தராமையா கேட்டார். ஆனால் அவர் கேட்ட தேதியில் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை. இந்த வி‌ஷயத்தில் பிரதமரின் செயலை சித்தராமையா கடுமையாக கண்டித்தார். இந்த நிலையில் 30–ந் தேதி(அதாவது நேற்று) பிரதமரை சந்திக்க முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையா எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று பிற்பகலில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு இரவு 7 மணியளவில் பிரதமரை சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா, நிர்மலா சீதாராமன், மாநில மந்திரிகள் எச்.கே.பட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, ரேவண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.

ரூ.4,700 கோடி நிதி ஒதுக்க...

இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. அப்போது, சித்தராமையா, கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், இதுகுறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளதாகவும் கூறினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4,700 கோடி நிதியை ஒதுக்குமாறு பிரதமரிடம் சித்தராமையா கோரினார். இது தொடர்பாக ஒரு மனுவையும் அவர் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர், உரிய உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்