மீன்வளத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டம் அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டு போட்டனர்
புதுவையில் மீன்வளத்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து மீன்வளத்துறை அதிகாரிகளை சிறை பிடித்து மீனவர்கள் முற்றுகை போ
புதுவையில் மீன்வளத்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து மீன்வளத்துறை அதிகாரிகளை சிறை பிடித்து மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டும் போடப்பட்டது.
அலுவலகத்துக்கு பூட்டு
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். துறைமுகப்பகுதியில் தூர்வாரப்பட்டு வருவதால் கடந்த 2 மாதங்களாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் டீசல் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் நேற்று மதியம் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களை அலுவலகத்தின் உள்ளேயே சிறைவைத்து வாயிற்கதவை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
வெளியே அமர்ந்து கோஷம்
இதன்பின் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கண்டித்தும், மீனவர்களுக்கான உதவிகளை தாமதமின்றி வழங்கக் கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.