கைது செய்யப்பட்ட கணவரை விடுதலை செய்ய வேண்டும் கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்த பெண் கண்ணீர் மனு
ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 20). இவர் கைக்குழந்தையுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அங்குள்ள கூட்ட அரங்கில் வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. உடனே கூட்டரங்கிற்குள் நுழைந்த மஞ்சுளா கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்று கொடு
ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 20). இவர் கைக்குழந்தையுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அங்குள்ள கூட்ட அரங்கில் வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. உடனே கூட்டரங்கிற்குள் நுழைந்த மஞ்சுளா கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். எனக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. என் கணவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் எனது கணவரை ஈரோடு தாலுகா போலீசார் கடந்த 28-ந் தேதி நகை பறிப்பு வழக்கில் கைது செய்து அழைத்து சென்றனர். அவருக்கும், நகை பறிப்பு சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே எனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு விரைந்து சென்று மஞ்சுளா விடம் விவரங்களை கேட்டு அறிந்தார். பின்னர் மஞ்சுளாவை போலீசார் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.