கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி மனைவியை காப்பாற்ற முயன்ற போது பரிதாபம்

கூடலூர் அருகே தோட்டத்தில் வேலை செய்த போது மின்சாரம் பாய்ந்ததில் மனைவியை காப்பாற்ற முயன்ற விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 60). விவசாயி. இவருக்கு

Update: 2016-12-30 22:45 GMT
கூடலூர் அருகே தோட்டத்தில் வேலை செய்த போது மின்சாரம் பாய்ந்ததில் மனைவியை காப்பாற்ற முயன்ற விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் கூடலூர் அருகேயுள்ள காஞ்சிமரத்துறை என்னுமிடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இவரும், அவருடைய மனைவி மாமாயியும் (50) தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

தோட்டத்தில் மின்சார மோட்டாருக்கு சென்ற மின்வயரை மாமாயி எதிர்பாராதவிதமாக பிடித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் அய்யோ, காப்பாற்றுங்கள் என்று அலறினார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த முத்தையா ஓடி வந்து மனைவியை தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராமல் அந்த மின்வயரை முத்தையா பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

பின்னர் தகவலறிந்த லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த மாமாயியை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்த முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண்முன்னே மின்சாரம் பாய்ந்து கணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்