கிண்டியில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் உஸ்மான்(வயது 33). இவர், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு வந்த உஸ்மான், கிண்டி தொழிற்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த

Update: 2016-12-30 22:15 GMT

ஆலந்தூர்,

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் உஸ்மான்(வயது 33). இவர், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு வந்த உஸ்மான், கிண்டி தொழிற்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென உஸ்மானிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர். இதுபற்றி அந்த வழியாக வந்த ரோந்து போலீசாரிடம் உஸ்மான் தெரிவித்தார். உடனே ரோந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 மர்மநபர்களையும் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், பரங்கிமலையை சேர்ந்த வசந்தகுமார்(19) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், இருவரும் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது. கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்