புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தி.க. சார்பில் நடைபெற்றது

திருவாரூர், புதிய கல்வி கொள்கையை கண்டித்து தி.க. சார்பில் திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம்

Update: 2016-12-30 22:45 GMT
திருவாரூர்,

புதிய கல்வி கொள்கையை கண்டித்து தி.க. சார்பில் திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

புதிய கல்வி கொள்கையை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். தி.க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சரவணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சங்கரன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் ராஜசேகர், பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் இளங்கோவன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் நுழைவு தேர்வுத்தேர்வை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்