நாட்டறம்பள்ளி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

நாட்டறம்பள்ளி அருகே உள்ள பந்தாரபள்ளியில் அம்மன் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்டு கோவில் அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

Update: 2016-12-30 22:30 GMT

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளி அருகே உள்ள பந்தாரபள்ளியில் அம்மன் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்டு கோவில் அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், புதுபேட்டையை அடுத்த கல்நாசம்பட்டி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்