தென்காசி அருகே மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் விழிப்புணர்வையும், போலி அறிவியல் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விழிப்புணர்வையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் “எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்“ என்ற வாசகத்துடன் நடத்தப்படுகிறது.
தென்காசி,
தென்காசி அருகே மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி முகாம்

இந்தியா முழுவதும் 40 அறிவியல் இயக்கங்கள் இணைந்து இந்த முகாம்களை ஒரு வருடம் நடத்த இந்த இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் 7–ந் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு (2017) நவம்பர் 7–ந் தேதி முடிவு பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சமம் உபகுழு பெண்கள் மூலம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி ஆர்.பி.மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கைகள் விழிப்புணர்வு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு பொது செயலாளர் ரமேஷ் மற்றும் கருத்தாளர் மனோகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
நெருப்பு விளையாட்டு
தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் இருந்து 30 பெண்கள் முகாமில் பயிற்சி பெற்றனர். பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர். முகாமில் நெருப்பு விளையாட்டு, அலகு குத்துதல், கழுத்தை கயிறு கொண்டு அறுத்தல், கை சதைக்குள் ஊசி குத்துதல், பணத்தை சதைக்குள் சொருகுதல் என 25 வகையான மேஜிக்குகள் விளக்கி அதன் பின்னணியில் உள்ள அறிவியலும், தந்திரமும் விளக்கி கூறப்பட்டது.
நேற்று முன்தினம் முகாமில் கலந்து கொண்ட பெண்கள் இந்த மேஜிக்குகளை இலஞ்சி அருகே உள்ள அய்யாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பொது மக்கள் முன்னிலையில் செய்து காட்டினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அறிவியல் கல்வி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், சமம் ஒருங்கிணைப்பாளர் சாந்தி, நெல்லை மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுரேஷ்குமார், பொறுப்பாளர் ராமையா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், செயலாளர் சண்முக வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று இதன் நிறைவு விழா நடைபெற்றது. அறிவியல் இயக்க மாநில தலைவர் மோகனா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 1,000 பொது நிகழ்ச்சிகளாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.