கோவில்பட்டியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது
கோவில்பட்டியில், பள்ளிக்கூட மாணவர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டி நேற்று தொடங்கியது. சதுரங்க போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட சதுரங்க கழகம், தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில், மாநில அளவில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான சதுரங்க போ
கோவில்பட்டி,
கோவில்பட்டியில், பள்ளிக்கூட மாணவர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டி நேற்று தொடங்கியது.
சதுரங்க போட்டிகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட சதுரங்க கழகம், தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில், மாநில அளவில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நேற்று காலையில் தொடங்கியது. கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய சதுரங்க போட்டியில் 2–வது இடம் பிடித்த திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி பள்ளிக்கூட மாணவர் சக்தி விஷாலுடன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். மாநில சதுரங்க கழக துணை செயலாளர் எப்ரேம் வாழ்த்தி பேசினார்.
பள்ளிக்கூட மாணவர்களில் 14, 18 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. 14 வயது பிரிவில் 630 பேரும், 18 வயது பிரிவில் 110 பேரும் கலந்து கொண்டனர்.
இன்று இறுதிப்போட்டிபோட்டிகள் மொத்தம் 9 சுற்றுகளாக நடக்கிறது. 14 வயது பிரிவில் முதல் 25 இடங்களை பெறுகிறவர்களுக்கும், 18 வயது பிரிவில் முதல் 15 இடங்களை பெறுகிறவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல் 10 இடங்களை பெறுகிறவர்களுக்கும், 8 மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
இன்று (சனிக்கிழமை) இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு மொத்த பரிசுத்தொகையான ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பகிர்ந்து அளிக்கப்படும். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாசலம் ஆலோசனையின்பேரில், உடற்கல்வி இயக்குனர்கள் ரகு, கீதா ஆகியோர் செய்து உள்ளனர்.