மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் படுகாயம்
மதுரை மேலமடை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது56). சமையல்காரராக உள்ளார். இவரும் சோழவந்தானை சேர்ந்த திருமுருகன்(37) என்பவரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். காரியாபட்டி அருகே தம்பிக்குடி விலக்கு என்ற இடத;
காரியாபட்டி,
மதுரை மேலமடை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது56). சமையல்காரராக உள்ளார். இவரும் சோழவந்தானை சேர்ந்த திருமுருகன்(37) என்பவரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். காரியாபட்டி அருகே தம்பிக்குடி விலக்கு என்ற இடத்தில் சென்ற போது திடீரென நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.