திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள வயலாநல்லூரில் இருந்து குப்பத்துமேடு செல்லும் சாலையில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் சாலையோரம் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

Update: 2016-12-29 23:49 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள வயலாநல்லூரில் இருந்து குப்பத்துமேடு செல்லும் சாலையில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் சாலையோரம் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வயலாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சகிலாபானுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்த பெண் சென்னை ஆவடி கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி சாரதாம்பாள் (70) என்பது தெரியவந்தது. விசாரணையில் வேலை விஷயமாக பூந்தமல்லி சென்ற அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு வரும் போது தவறி விழுந்து இறந்துள்ளார் என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பிச்சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்