மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்: மார்த்தாண்டம் பஸ்நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடியது
குழித்துறை, மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்த்தாண்டம் பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேம்பால பணி மார்த்தாண்;
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்த்தாண்டம் பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேம்பால பணி
மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுமணி முதல் பம்மம் வரையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 2½ கிலோ மீட்டர் தூரம் வரை அமைய உள்ள இந்த மேம்பாலத்துக்கு தற்போது முதற்கட்டமாக வெட்டுமணியில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பு ஸ்டேட் வங்கி பகுதி வரை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சாலையின் நடுவில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியையொட்டி மார்த்தாண்டத்தில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்கள் தற்போதுள்ள தடத்தில் செல்கிறது. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் குழித்துறையில் இருந்து மேல்புறம், திக்குறிச்சி, பயணம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்
டவுண் பஸ்களை பொறுத்தவரையில் கொல்லங்கோடு, தூத்தூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், அருமனை, களியல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் குழித்துறையில் இருந்து இயக்கப்படுகிறது. தேங்காப்பட்டணம், இனயம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வெட்டுமணியில் இருந்து இயக்கப்படுகிறது.
தற்போது மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எல்.எஸ்.எஸ். பஸ்களும், குலசேகரம், குளச்சல் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களும் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே மார்த்தாண்டம் பஸ்நிலையத்திற்கு பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
பஸ்நிலையம் வெறிச்சோடியது
இதனால் பயணிகள் இன்றி மார்த்தாண்டம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் வராததால் பஸ்நிலையத்திலும், சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், மற்றும் இதர விற்பனை நிலையங்களிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.