கல்யாண் - வித்தல்வாடி இடையே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து பயணிகள் உயிர் தப்பினர்

மும்பை,டிச.30– மும்பை மாநகராட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்து உள்ளது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டது. மும்பை மாநகராட்சி தேர்தல் நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியின் தற

Update: 2016-12-29 23:18 GMT
மும்பை,

கல்யாண் - வித்தல்வாடி இடையே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மெயின் வழித்தடம்

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.டி.யில் இருந்து குர்லா, தானே, டோம்பிவிலி, கல்யாண், அம்பர்நாத், பத்லாப்பூர், கர்ஜத், கோபோலி, டிட்வாலா, அசன்காவ், கசாரா வரையிலும் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவையை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர தாதர், குர்லா, தானேயில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மின்சார ரெயில் தடம் புரண்டது

நேற்று அதிகாலை குர்லாவில் இருந்து அம்பர்நாத் நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் மிக குறைவான பயணிகளே ரெயிலில் இருந்தனர்.

அதிகாலை 5.53 மணியளவில் கல்யாண் - வித்தல் வாடி ரெயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த மின்சார ரெயில் தடம் புரண்டது.

5 பெட்டிகள் இறங்கின

ரெயிலின் முதல் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கி நின்றன. இதன் காரணமாக ரெயில் பயங்கரமாக குலுங்கியது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இருக்கைகளில் இருந்து விழுந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சல் போட்டனர்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள். அந்த ரெயிலை இயக்கிய மோட்டார்மேனும் அதிர்ச்சியுடன் காணப்பட்டார்.தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

துண்டான தண்டவாளம்

அப்போது ரெயில் தடம் புரண்ட இடத்தில் ஒரு தண்டவாளம் சுமார் 5 மீட்டர் நீளத்திற்கு துண்டாகி கிடந்தது. ரெயில் சக்கரம் வேகமாக தண்டவாளத்தில் இருந்து இறங்கியதில் தண்டவாளத்தை தாங்கியிருக்கும் கான்கிரீட் பில்லர்கள் பலத்த சேதம் அடைந்து இருந்தன.

ரெயில் தடம் புரண்ட இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணிகளும் வேகமாக நடந்தன. இந்த விபத்தின் காரணமாக கல்யாண் - அம்பர்நாத் இடையே ரெயில் சேவை முடங்கியது.

சிறப்பு பஸ்கள்

சி.எஸ்.டி. - கல்யாண், கசாரா இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அம்பர்நாத் - கர்ஜத் இடையே குறுகிய தூர ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன.

பயணிகளின் வசதிக்காக அம்பர்நாத் - கல்யாண் இடையே கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மின்சார ரெயில் தடம் புரண்டதை தொடர்ந்து நீண்ட தூர ரெயில்களை ரத்து செய்யவும், மாற்று வழித்தடத்தில் இயக்கவும் மத்திய ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

இதன்படி சி.எஸ்.டி. - புனே டெக்கான் குயின், சி.எஸ்.டி. - புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சி.எஸ்.டி. - புனே இந்திராயணி எக்ஸ்பிரஸ், உதயன் எக்ஸ்பிரஸ், புனே டெக்கான் எக்ஸ்பரஸ், கோலாப்பூர் கொய்னா எக்ஸ்பிரஸ், மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சி.எஸ்.டி. - சென்னை எக்ஸ்பிரஸ், சி.எஸ்.டி. - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் உள்பட 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திவா-பன்வெல்-கர்ஜத் வழியாக திருப்பி விடப்பட்டன.

இதேபோல மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் கர்ஜத்-பன்வெல்-திவா வழியாக மும்பை வந்தடைந்தன. இந்த நிலையில், ரெயில் தடம் புரண்ட இடத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்தன. மின்சார ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறிவதற்கான மத்திய ரெயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்