நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் எடியூரப்பா பேச்சு
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் என்று எடியூரப்பா கூறினார். வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பழைய நகரில் தனியார் அமைப்பின் சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட
பத்ராவதி
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் என்று எடியூரப்பா கூறினார்.
வாஜ்பாய் பிறந்தநாள் விழாசிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பழைய நகரில் தனியார் அமைப்பின் சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் முதல்–மந்திரியும், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து எடியூரப்பா, அம்பேத்கரின் நினைவாக அவருடைய உருவப்படம் உள்ள 2017–ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டார். இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:–
தொலைநோக்கு பார்வையுடன்...நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார். தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தது போன்ற தைரியமான முடிவை முந்தைய மத்திய அரசு எடுக்கவில்லை. கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தான், மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஏழை, எளிய மக்கள் மோடியின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பத்ராவதி எம்.விசுவேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலை வளர்ச்சி பற்றி பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். எக்காரணம் கொண்டும் தொழிற்சாலையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இரும்பு மேம்பாலம்பத்ராவதி கடதகட்டே பி.எச்.ரோட்டில் அமைந்துள்ள இரும்பு ரெயில்வே பாலம் குறுகியதாக உள்ளதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தாசில்தார் எம்.ஆர்.நாகராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் ருத்ரேகவுடா உள்பட பலர் கலந்துகொண்டனர்.