பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களை தேடி சென்று குறைகளை தீர்க்கும் வகையில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல், சிட்டா நகல், ஆதார் அட்டை பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்த கோரிக்கை ம
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களை தேடி சென்று குறைகளை தீர்க்கும் வகையில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல், சிட்டா நகல், ஆதார் அட்டை பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்படுகின்றன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) வேப்பந்தட்டை வட்டத்தில் அனுக்கூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அ.குடிக்காடு, குன்னம் வட்டத்தில் சித்தளி (மேற்கு) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பீல்வாடி, ஆலத்தூர் வட்டத்தில் அழகிரிபாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மங்கலம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாமில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.