திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் விபத்து தவிர்ப்பு

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே 2-வது ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் சிறிய அளவிலான விரிசல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது உடனடியாக சரி செய்யப் பட்டதால் விபத்து தவிர்க்கப் பட்டது. தண்டவாளத்தில் பிரச்சினை திருப்பூர்-ஊத்துக்குளி மார்க்கத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக நேற்று காலை ரெயில்கள் சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற ஒரு ரெயில்;

Update: 2016-12-29 22:45 GMT
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே 2-வது ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் சிறிய அளவிலான விரிசல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது உடனடியாக சரி செய்யப் பட்டதால் விபத்து தவிர்க்கப் பட்டது.

தண்டவாளத்தில் பிரச்சினை

திருப்பூர்-ஊத்துக்குளி மார்க்கத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக நேற்று காலை ரெயில்கள் சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற ஒரு ரெயில் என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது திருப்பூர்- ஊத்துக்குளி மார்க்கத்தில் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 2-ம் ரெயில்வே கேட் பகுதியில் ஏதோ பிரச்சினை உள்ளது. அந்தபகுதியில் ரெயில் செல்லும் போது தண்ட வாளத்தில் இருந்து ஒரு வித சத்தம் வருகிறது என்றார். அதைத்தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அத்துடன் தண்ட வாளத்தில் உள்ள ஜல்லி கற்களை சரி செய்யும் பராமரிப்பு பணியாளர்களும் அங்கு வந்தனர்.

விரிசல் கண்டுபிடிப்பு

அப்போது அந்த வழியாக மும்பையில் இருந்து கோவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்றது. அந்த ரெயில் 2-வது ரெயிவ்வே கேட் அருகே வந்த போது தண்டவாளத்தில் அதிக சத்தம் வருவது தெரியவந்தது. எனவே ரெயில்வே தண்ட வாள பராமரிப்பு பணியாளர் கள், அதிகாரிகள் சத்தம் வந்த தண்டவாள பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது தண்டவாள பகுதியில் சிறிய அளவிலான விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதற்காக அந்த வழியாக வரும் ரெயில்கள் அனைத்தும் குறிப் பிட்ட தூரத்தில் இருந்து வேகத்தை குறைத்து மெதுவாக வரும்படி அறிவுறுத்தப் பட்டது.

ரெயில்கள் தாமதம்

இந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை இருக்காது என்பதால் சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் தண்ட வாள சீரமைப்பு பணியாளர் கள் விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கினார்கள். இதற்காக விரிசல் ஏற்பட்டி ருந்த தண்டவாள பகுதி சுமார் 2 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்டது.

பின்னர் துண்டிக்கப்பட்ட பகுதியில் புதிய தண்ட வாளத்தை பிரத்தியேக எந்திரங்களை பயன்படுத்தி பொருத்தி சீரமைத்தனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தண்டவாளங்களில் சிறிய அளவிலான சேதங்கள் இருந்தாலும் அதை பராமரிப்பது ரெயில்வே நிர்வாகத்தின் கடமை. திருப்பூர் ரெயில் நிலையம் அருகே 2-வது ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத் தில் சிறிய அளவிலான விரிசல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வழித் தடத்தில் மேலும் சில ரெயில்கள் வந்தால் அந்த விரிசல் பெரிதாகி பெரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் விரிசல் சிறியது என்பதாலும், உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதாலும் விபத்து ஏற்படாமல் தவிர்க் கப்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்திற்கோ, பயணி களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றனர்.

இதனால் அந்த வழியாக செல்ல இருந்த ரெயில்கள் சிறிது நேரம் தாமதாக வந்து சென்றன.

மேலும் செய்திகள்