கொலக்கம்பை பகுதியில் கடும் குளிர் தீ மூட்டி குளிர் காயும் விவசாய தொழிலாளர்கள்
கொலக்கம்பை பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் கேரட் அறுவடைக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். மழை இல்லை கொலக்கம்பை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான தூதூர்மட்டம், அறையட்டி, அதிகரட்டி, சேலா
கொலக்கம்பை பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் கேரட் அறுவடைக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
மழை இல்லை
கொலக்கம்பை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான தூதூர்மட்டம், அறையட்டி, அதிகரட்டி, சேலாஸ், மேலூர், கைகாட்டி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், இரவில் பரவலாக மழை பெய்தும் வந்தது. இதனால் இப்பகுதிளில் உள்ள விவசாய நிலங்கள், வனப் பகுதிகள், தேயிலை தோட்டங்களில் லேசான ஈரப்பதம் காணப்பட்டது,
ஆனால் எதிர்பார்த்தாற் போல் மழை இல்லாததால் விவசாய பயிர்களின் மகசூல் குறைந்தது. குறுகிய காலம் மட்டுமே மழை பெய்ததால் நீராதாரங்களிலும் போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
கடுங்குளிர்
இந்த நிலையில் தற்போது கொலக்கம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நீர்பனி பொழிவும், பகல் நேரங்களில் சமவெளி பகுதிகளுக்கு ஈடாக கடுமையாக வெயிலும் சுட்டெரித்து வருகிறது. மாலை முதல் அதிகாலை வரை நிலவி வரும் நீர்பனியால் கடுங்குளிர் நிலவுகிறது.
இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கம்பளி ஆடைகளை உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில் கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்துக்கு கேரட் அறுவடைக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் கடுங்குளிரால் கேரட்டை அறுவடை செய்ய முடியாமல் அவதிபட்டனர். பின்னர் குளிர் காய்வதற்காக அங்குள்ள ஒரு இடத்தில் தீமூட்டி சுற்றி நின்று குளிர் காய்ந்தனர். குளிர் காய்ந்த பிறகு தான் கேரட் அறுவடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
விளையாட்டு வீரர்கள்
கோத்தகிரியிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் அங்குள்ள காந்தி மைதானத்திற்கு காலை 6 மணிக்கே விளையாட வந்த வீரர்கள் கடும் அவதிபட்டனர். பனி மூட்டத்தை மறந்து தங்களது விளையாட்டுகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க உடல் முழுவதும் கம்பளி ஆடை அணிந்து இருந்தனர்.
காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதாலும், குளிர் காணப்படுவதாலும் சுற்றுலா வரும் பயணிகள் கடும் அவதிபடுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளால் சிரமப்படுகிறார்கள். சுகாதார மையங்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.