செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு; ரெயில்கள் தாமதம்

தாம்பரம், செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் தாமதமாக சென்றன. சிக்னல் கோளாறு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. காலை;

Update:2016-12-30 05:00 IST
தாம்பரம்,

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் தாமதமாக சென்றன.

சிக்னல் கோளாறு

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 8.40 மணியளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்றபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து மின்சார ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார். மேலும் சிக்னல் கோளாறு குறித்து செங்கல்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதேபோல் சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டன.

ரெயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன.

சிக்னல் கோளாறு காரணமாக அந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் தாமதமாக சென்றன.

மேலும் செய்திகள்