மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மன்னார்குடி, மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் பத்து உற்சவம்

Update: 2016-12-29 23:00 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகல் பத்து உற்சவம்

தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் திருவிழா காணும் இந்த கோவிலில் மார்கழி மாதம் பெருமாளுக்கு 10 நாட்கள் பகல் பத்து உற்சவமும், அதை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இராபத்து உற்சவமும் சிறப்பு மிக்க தாகும்.

இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ருக்குமணி, சத்யபாமா, ராஜகோ பாலசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் மாலையில் பெருமாள் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவிலின் உள்ளே முற்றம்வெளி பிரகாரத்திற்கு எழுந்தருளுவார். அப்போது ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுக்கு மங்களாசாசனம் நடைபெறும். இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி

இராபத்து முதல் நாள் திருவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அதிகாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் மூலவர் சன்னதியில் இருந்து ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபாலசாமி பல்லக்கில் புறப்பட்டு, தாயார் தெற்கு, மேற்கு பிரகாரம், ராமர் சன்னதி வழியாக சொர்க்கவாசல் அருகே செல்வார். இதைதொடர்ந்து சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளிவார். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்துவிட்டு மூலவர் சன்னதிக்கு சென்றடைவார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான சிவராம்குமார், செயல் அலுவலர் சுகுமார், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்