எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் அரசுத்தேர்வுகள் கடலூர் மண்டல துணை இயக்குனர் அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் கடலூர் மண்டல துணை இயக்குனர் அறிவித்துள்ளார். ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் மார்ச் 2017–ல் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விர;
கடலூர்,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் கடலூர் மண்டல துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்மார்ச் 2017–ல் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் வருகிற 4–ந்தேதி (புதன்கிழமை) வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் செய்முறை வகுப்புக்கும் ஆன்–லைனில் பதிவு செய்யலாம். அறிவியல் பாடத்தை பொறுத்தவரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்று, செய்முறை தேர்வு எழுதிய பிறகே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வை எழுத முடியும். ஆகவே ஏற்கனவே அறிவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தற்போது வழங்கப்படும் சலுகையை பயன்படுத்தி அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகள்நேரடி தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி–1–ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழி பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும். தனித்தேர்வர்கள், அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தகுதியற்றவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படமாட்டாது.
மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.
மேற்கண்ட தகவலை அரசுத்தேர்வுகள் கடலூர் மண்டல துணை இயக்குனர் (பொறுப்பு) வீரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.