தேன்கனிக்கோட்டை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவய்யா. இவருடைய மகன் ருத்ரேஷ் (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த ருத்ரேஷ் தளி கொத்தனூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்க

Update: 2016-12-29 22:45 GMT

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவய்யா. இவருடைய மகன் ருத்ரேஷ் (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த ருத்ரேஷ் தளி கொத்தனூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ருத்ரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் ருத்ரேஷ் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்