களக்காடு அருகே யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
களக்காடு தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் சமீப காலமாக சிறுத்தை, யானை, காட்டு பன்றி, கரடி, கடமான் போன்ற வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
களக்காடு,
களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன.
வனவிலங்குகள் அட்டகாசம்

மலையடிவாரத்தில் வன எல்லையில் உள்ள மின்வேலி, அகழி செயல் இழந்ததால் வனவிலங்குகள் ஊருக்குள் அத்துமீறி வருவதை தடுக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
வாழை–தென்னை சேதம்
இந்த நிலையில் களக்காடு தலையணை மலையடிவார பகுதியான கள்ளியாறு பகுதியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் அசோக் கென்னடி மகன் நரிணிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு இருந்த வாழைகளை சூறையாடின. மேலும் யானை ஒன்றும் தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி சென்று உள்ளது. 280 வாழைகளும், ஒரு தென்னை மரமும் சேதமடைந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் காட்டு பன்றிகள் கூட்டம் 500 வாழைகளை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.