திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின்

Update: 2016-12-29 23:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல், மாநில பொருளாளர் எத்திராஜ் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள் வரவேற்றார். மாநில இளைஞர் அணி செயலாளர் சந்திரகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் ராயர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சலாம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்