தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவம், யோகா பிரிவு தொடக்கம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இயற்கை மருத்துவம் தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இயற்கை மருத்துவம் பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி

Update: 2016-12-29 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு நேற்று தொடங்கப்பட்டது.

இயற்கை மருத்துவம்

தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இயற்கை மருத்துவம் பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவம், யோகா, அக்கு பஞ்சர் மருத்துவ பிரிவு நேற்று காலை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர் திருமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தகுமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பானு ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ பிரிவை தொடங்கி வைத்தனர்.

அனைத்து நோய்களுக்கும்...

இந்த இயற்கை மருத்துவ பிரிவு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் செயல்படும். இங்கு அல்சர், ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, கழுத்து, தோல்பட்டை எலும்பு தேய்மானம், இடுப்பு, மூட்டு வலி, நீர்க்கோவை, தோல்நோய், மற்றும் மன அழுத்தத்தால் வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு தியானம், யோகாசனங்கள் பயிற்சி, அக்கு பஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்