நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. அம்மா திட்ட முகாம் தமிழக அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்கள
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
அம்மா திட்ட முகாம்தமிழக அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் நேரம், செலவு வீணாகிறது.
மேலும் பல்வேறு இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று நடக்கிறதுநெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 தாலுகாக்களில் ஏற்கனவே 11 தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 3–வது கட்ட அம்மா திட்ட முகாம்கள் முடிவடைந்து விட்டன. மீதம் உள்ள 4 தாலுகாக்களில் இன்று 30–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
நெல்லை தாலுகா தச்சநல்லூர், பாளையங்கோட்டை தாலுகா சீவலப்பேரி, சங்கரன்கோவில் தாலுகா மூவிருந்தாளி மற்றும் நாங்குநேரி தாலுகா தேவநல்லூர் ஆகிய 4 கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் இன்று நடக்கின்றன.
முகாமில் பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட கோரிக்கைகள், பட்டா மாறுதல் மனு, வருவாய்த்துறை சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்றவை தங்களது கிராமத்துக்கு கிடைக்கும் வகையில் மனுக்களை அளிக்கலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.