பாளையங்கோட்டை அருகே துணிகரம் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை

பாளையங்கோட்டை அருகே கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்து ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தங்கச்சங்கிலி பறிப்பு பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன

Update: 2016-12-29 19:30 GMT

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்து ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் ஆலையில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 52). நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணனும், ராமலட்சுமியும் கடைக்கு சென்று விட்டு கிருஷ்ணாபுரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மர்ம நபர்கள் திடீரென்று ராமலட்சுமி அருகில் வந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி கூச்சலிட்டார். இதையொட்டி அந்த வழியாக சென்ற சிலர் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்று விட்டார்கள்.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்