நடத்தையில் சந்தேகம்: காதல் திருமணம் செய்த பெண்ணை கொல்ல முயன்ற கணவர் கைது
திருவட்டார் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகம் திருவட்டார் அருகே இடைக்காதவிளை சாரூர் பகுதியை சேர்ந்தவர் செல்வின் (வயது 38), லாரி டிரைவர். இவருடைய மனைவி ரோஸ்லின் ஜெனிதா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 10 ஆண்டுகளு
திருவட்டார் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
நடத்தையில் சந்தேகம்
திருவட்டார் அருகே இடைக்காதவிளை சாரூர் பகுதியை சேர்ந்தவர் செல்வின் (வயது 38), லாரி டிரைவர். இவருடைய மனைவி ரோஸ்லின் ஜெனிதா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக ரோஸ்லின் ஜெனிதாவின் நடத்தையில் செல்வின் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரோஸ்லின் ஜெனிதாவிடம் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக ரோஸ்லின் ஜெனிதா 2 முறை திருவட்டார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே கடந்த 26-ந் தேதி அன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை உடைத்து செல்வின் சேதப்படுத்தி உள்ளார்.
கத்தியால் கொல்ல முயற்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் செல்வின், மனைவி ரோஸ்லின் ஜெனிதாவிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வின், ரோஸ்லின் ஜெனிதாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட ரோஸ்லின் ஜெனிதா அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி விட்டார். மேலும் அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் செல்வின் கத்தியுடன் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இதுபற்றி ரோஸ்லின் ஜெனிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வினை கைது செய்தனர்.