பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? அதிகாரி பதில்
பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? அதிகாரி பதில்;
நாகர்கோவில்,
பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? என்பதற்கு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டம் குறைந்தது
நாடு முழுவதும் உயர் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பணத்தட்டுப்பாடு பிரச்சினை அதிகரித்ததால், மக்கள் அல்லோலப் பட்டு வருகின்றனர். இதனால் நாள்தோறும் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. ஏ.டி.எம்.களில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் திறக்கப்படாததால் திறந்திருந்த ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி பணம் எடுக்க குமரி மாவட்ட வங்கிகளுக்கு வருபவர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாகவே இருந்து வந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து வங்கிகளில் தற்போது கூட்டம் குறைந்து வருகிறது. வங்கிகளிலும் தற்போது பணத்தட்டுப்பாடு பிரச்சினை குறைந்திருக்கிறது. பணத்தட்டுப்பாடு நிலவிய வங்கிகளில் கூட நேற்று கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்ட தொகை அதாவது ஒரு வாரத்துக்குரிய உச்சவரம்புத்தொகை ரூ.24 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் வழக்கம்போல் ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே திறந்திருந்தன. ஆனாலும் நேற்று ஏ.டி.எம்.களிலும் பெரிய அளவில் கூட்டத்தை பார்க்க முடியவில்லை.
தற்போது குமரி மாவட்ட வங்கிகளில் 500 ரூபாய் புதிய நோட்டுகள் வழங்கப்படுவதால் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினையும் குறைந்துள்ளது. வங்கிகளின் ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
சம்பளம் வழங்க முடியுமா?
தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில் தற்போது பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வங்கிகளில் இருந்தும் போதிய அளவு பணம் கிடைக்காததால் தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கேட்ட தொகையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இதேபோன்ற நிலைதான் மாவட்டம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் நிலவியது.
பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இதேபோல் தபால்துறை ஓய்வூதியதாரர்களுக்கும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை பெறுபவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும் என்று தபால்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு அதிகாரி கூறும்போது, வங்கியில் பணம் கேட்டுள்ளோம். பணம் கொடுத்தால் தபால்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும். இல்லாவிட்டால் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே வங்கி அதிகாரிகள் பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்கள். தந்துவிட்டால் பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்றார்.