புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் உணவு சமைத்து சாப்பிட்டனர். வறட்சி மாநிலமாக... மத்திய அரசு, தமிழகத்தை

Update: 2016-12-28 22:54 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் உணவு சமைத்து சாப்பிட்டனர்.

வறட்சி மாநிலமாக...

மத்திய அரசு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வேண்டும். 2015-16-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத்திட்ட இழப்பீட்டை பொங்கல் பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் அனைத்தையும் மத்திய மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்களாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று 3-வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் லாசர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்கதலைவர்களை மாவட்ட கலெக்டர் அழைத்துப் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்திய சங்கத் தலைவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை முறைப்படி அரசுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். அதற்கு நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு வந்தனர். பிறகு போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே உணவை தயாரித்து சாப்பிட்டனர். பின்னர் இந்த போராட்டம் நாளையும் (இன்றும்) தொடரும் என அறிவித்தனர்.

மேலும் செய்திகள்