தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பெரம்பலூரில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
பெரம்பலூர், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பெரம்பலூரில் விவசாய சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வறட்சி நிவா
பெரம்பலூர்,
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பெரம்பலூரில் விவசாய சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்கிட வேண்டும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 1 ஏக்கர் நெல், வெங்காய பயிர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், சோளம், பருத்தி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும், கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர், அரியலூர் மாவட்டக்குழு சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து அங்கு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், ஏரிபாசன விவசாயிகள் சங்க செயலாளர் விஸ்வநாதன், திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் பூலாம்பாடி வரதராஜன் மற்றும் கரும்பு விவசாய சங்கத்தினர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதற்கிடையே, நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) துரை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.