ஸ்ரீரங்கத்தில் 8-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் கமிஷனர் பேட்டி
ஸ்ரீரங்கத்தில் 8-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படஉள்ளனர் என்று கமிஷனர் மஞ்சுநாதா கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி;
ஸ்ரீரங்கத்தில் 8-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படஉள்ளனர் என்று கமிஷனர் மஞ்சுநாதா கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதையொட்டி திருச்சி மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 27 முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள 20 இடங்களில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முக்கிய 3 இடங்களில் ஸ்பீடு டூம் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
முக்கிய இடங்களில்...
பக்தர்களின் வசதிக்காக திருவிழாவை கண்டுகளிக்க 6 இடங்களில் எல்.இ.டி. டி.வி.யும், 15 இடங்களில் எல்.சி.டி. டி.வி.யும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தை தடுக்கவும், குற்றம் நடைபெறாமல் கண்காணிக்கவும் கோவிலை சுற்றி 11 இடங்களில் ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழாவின் போது குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், கோவிலில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த காவல் ஆளினர்கள் 12 முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் கோவிலை சுற்றி 14 வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக 4 முக்கிய வீதிகளை சுற்றியும் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும். பக்தர்கள் வசதிக்காக புறக்காவல் நிலைய அவசர கைபேசி எண்கள் 82708 96677, 82708 96699 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல்பத்து திருவிழாவை முன்னிட்டு 4 போலீஸ் துணை கமிஷனர்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள், 373 போலீசார்கள், 70 ஊர்க்காவல் படையினர் உள்பட 511 பேர் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும் மற்றும் போக்குவரத்தை சரிசெய்வதற்கும் சுமார் 3 ஆயிரத்து 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கோவிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினர்.
புறக்காவல் திறப்பு நிகழ்ச்சியின் போது, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.
போக்குவரத்து மாற்றம்
சொர்க்கவாசல் திறப்பின்போது, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் பேருந்துகள் ஓடத்துறைபாலம், ஓயாமரி, தேசிய நெடுஞ்சாலை, கும்பகோணத்தான் சாலை, திருவானைக்காவல், அருள்முருகன் கார்டன், சிங்கப்பெருமாள் கோவில் வந்து பயணிகளை இறக்கிவிட்டு பின் நெல்சன் ரோடு, காந்திரோடு, இ.வி.ஆர். ரோடு வழியாக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவிரிப்பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்தை அடையும். சமயபுரத்திலிருந்து வரும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.
வாகனங்கள் நிறுத்துமிடங்கள்
பக்தர்கள் வரும் பேருந்துகள் சிங்கப்பெருமாள் கோவில், கும்பகோணத்தான் சாலை, யாத்திரிநிவாஸ் முன்புறம், நேஷனல் பள்ளி மைதானம் ஆகிய இடங்களிலும், கார்கள் மூலத்தோப்பு பகுதியிலும், இருசக்கர வாகனங்கள் ஆண்டவன் கல்லூரி மைதான மத்தியிலும், வி.ஐ.பி. கார்கள் தெற்கு சித்திரை வீதியிலும் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.