அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு

Update: 2016-12-28 19:31 GMT

நாகப்பட்டினம்,

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் பால், பன்னீர், தேன், திரவியம், தயிர், மஞ்சள், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடமாலை, துளசி மாலை மற்றும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

அதேபோல் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள ஜெயகாரியஅனுகூல ஆஞ்சநேயர், நாகை பெருமாள் சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், வெளிப்பாளையம் பெருமாள் தெற்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கல்லுக்கார தெருவில் உள்ள ஆஞ்சநேயர் மடம், வெளிப்பாளையம் ராமர்மடத்தில் உள்ள ஆஞ்சநேயர், கீழையூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்