மோட்டார் சைக்கிளில் சென்ற போது எல்.ஐ.சி. அதிகாரி தவற விட்ட நகையை நேர்மையுடன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஆவடி பூங்குழலி நகரைச் சேர்ந்தவர் குமார்(வயது 56). இவர், மாதவரத்தில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர், நேற்று அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இருந்த 15 பவுன் நகையை எடுத்தார். நகை மற்றும் எல்.ஐ.சி. பத்திரங்களை ஒரு பையில் வை;

Update: 2016-12-28 22:45 GMT

செங்குன்றம்,

ஆவடி பூங்குழலி நகரைச் சேர்ந்தவர் குமார்(வயது 56). இவர், மாதவரத்தில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர், நேற்று அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இருந்த 15 பவுன் நகையை எடுத்தார். நகை மற்றும் எல்.ஐ.சி. பத்திரங்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அலுவலகம் சென்றார்.

செங்குன்றம்–மாதவரம் நெடுஞ்சாலையில் மாதவரம் எஸ்.பி.கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நகை பை தவறி கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் குமார் சென்று விட்டார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் நகை, எல்.ஐ.சி. பத்திரம் இருப்பதை கண்டு அங்கிருந்தவர்களிடம் கேட்டார். யாரும் அந்த பையை சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் அவர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார்.

இதற்கிடையில் நகை, எல்.ஐ.சி. பத்திரம் மாயமானமாக குமார் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, வீட்டுக்கு சென்ற ரியாஸ் அகமது, நகை பையை தேடி அதன் உரிமையாளர் வருகிறாரா? என பார்க்க மீண்டும் அங்கு வந்தார்.

அப்போது போலீசார் இருப்பதை கண்டு தானாக முன்வந்து அந்த நகை பையை ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சங்கர் முன்னிலையில் நகை, எல்.ஐ.சி. பத்திரம் இருந்த பையை குமாரிடம் ஒப்படைத்த போலீசார், அதை நேர்மையுடன் ஒப்படைத்த ரியாஸ் அகமதுவை பாராட்டினர்.

மேலும் செய்திகள்