வயல் வெளியில் மேய்ச்சலுக்காக விட்டுச்சென்ற எருமை மாடுகளை திருடிய 2 பேர் கைது

சேலையூர் அருகே மேய்ச்சலுக்காக வயல்வெளியில் விட்டுச்சென்ற எருமை மாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். எருமை மாடுகள் திருட்டு சென்னையை அடுத்த சேலையூர் சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர், 2 எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய

Update: 2016-12-28 22:15 GMT

தாம்பரம்,

சேலையூர் அருகே மேய்ச்சலுக்காக வயல்வெளியில் விட்டுச்சென்ற எருமை மாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எருமை மாடுகள் திருட்டு

சென்னையை அடுத்த சேலையூர் சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர், 2 எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவர், தனது மாடுகளை வழக்கமாக சேலையூரை அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வயல் வெளியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு விட்டு வந்த இவரது 2 எருமை மாடுகளையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். இந்தநிலையில் பீர்க்கன்காரணை போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

2 பேர் கைது

அப்போது வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (40), சங்கு (35) ஆகிய இருவரும் 2 எருமை மாடுகளை மினி வேனில் ஏற்றி வந்தனர். போலீசார் அவர்களை விசாரித்தபோது அவை சுரேஷூக்கு சொந்தமான மாடுகள் என்பதும், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை திருடி மினிவேனில் ஏற்றி விற்க கொண்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து கமலக்கண்ணன், சங்கு இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 எருமை மாடுகள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெயில் மோதி பலி

* மறைமலைநகர்–சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் பர்மனி (21) மின்சார ரெயில் மோதியதில் பலியானார்.

* தாம்பரம் கஸ்தூரிபாய் நகரில் கஞ்சா விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த மகேந்திரனை (34) கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சா, ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

* அம்பத்தூர் பழைய நகராட்சி சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த சந்தோஷ் (55) என்பவரது கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த செல்போன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவில் உள்ள கிழவன்சாமி (46) என்பவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த 2 குடிசை வீடுகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் ஒரு மோட்டார்சைக்கிள், பணம், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

நூதன போராட்டம்

* மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் துணி துவைத்தும், குளித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* கோயம்பேடு பழ மார்க்கெட் 5–வது கேட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாபு (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

* கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி புஷ்பராணி (42) மினிவேன் மோதி பலியானார்.


மேலும் செய்திகள்