திருத்துறைப்பூண்டி அருகே எலி மருந்தை தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சி பக்கத்து வீட்டுக்காரர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவி ஒருவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மாணவியின் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவி தற்கொலை முயற்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மங்களநாயகிபுர

Update: 2016-12-28 18:17 GMT

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவி ஒருவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மாணவியின் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மாணவி தற்கொலை முயற்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மங்களநாயகிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது45). விவசாயி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 11–ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து தாமதமாக வீட்டுக்கு வந்ததை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் அந்த மாணவியை மாரிமுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி, எலிமருந்தை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்