நிதி நிறுவனத்தில் மோசடி: கிளை மேலாளர் உள்பட 2 பேர் கைது; ரூ.5¾ லட்சம் பறிமுதல்
ஆறுமுகநேரி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7½ லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த கிளை மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7½ லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த கிளை மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.7½ லட்சம் மோசடி
தூத்துக்குடி தாளமுத்துநகரை அடுத்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் காட்வின். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 26). இவர் ஆறுமுகநேரி எல்.எப். ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிதி நிறுவனம் சார்பில், ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டது.
இதற்கான அசல், வட்டி தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிஷாந்த் வசூலித்து வந்தார். கடந்த மாதம் மகளிர் சுய உதவிக்குழுவினர் 444 பேரிடம் மொத்தம் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 150–யை நிஷாந்த் வசூலித்தார். அப்போது அவர் மகளிர் சுய உதவிக்குழுவினரின் பாஸ் புத்தகத்தையும் வாங்கி சென்றார். பின்னர் நிஷாந்த் நிதி நிறுவனத்தில் அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் பழையகாயலில் நிஷாந்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.5½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் நிஷாந்த் தன்னுடைய நண்பரான அப்பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முத்துராஜிடம் (26) ரூ.25 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து முத்துராஜையும் போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை அவர்கள் 2 பேரும் சேர்ந்து செலவு செய்ததாக தெரிவித்தனர். கைதான 2 பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் அடைத்தனர்.