பசுவந்தனையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பசுவந்தனை பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2016-12-28 20:30 GMT
ஓட்டப்பிடாரம்,

பசுவந்தனை பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை கோவில்பட்டி உதவி கலெக்டர் கண்ணபிரான், ஓட்டப்பிடாரம் தாசில்தார் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அகஸ்டின் பாலன், வட்ட நில அளவையர் முத்துலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள், பசுவந்தனை மெயின் பஜார், கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, கோவில்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்