புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து 4 பெண் குழந்தையுடன் தாய் வெளியேறியதால் உயிர் தப்பினர்
புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளுடன், தாய் வெளியேறியதால் உயிர் தப்பினர். நள்ளிரவில் தீ விபத்து புதுப்பேட்டை அருகே உள்ள வேளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40)
நெல்லிக்குப்பம்,
புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளுடன், தாய் வெளியேறியதால் உயிர் தப்பினர்.
நள்ளிரவில் தீ விபத்துபுதுப்பேட்டை அருகே உள்ள வேளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி(35). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீரப்பன் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று விட்டார். வள்ளி தனது 4 குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் 1 மணி அளவில் திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.
அப்போது வீட்டின் மேற்கூரை ஓலை ஒன்று பெயர்ந்து, வள்ளியின் மீது விழுந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த வள்ளி, வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர், தூங்கிக்கொண்டிருந்த 4 குழந்தைகளையும் எழுப்பு வீட்டை விட்டு வெளியேறி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உயிர் தப்பினர்இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. பெட்டியில் வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, கொலுசு ஆகியவை உருகி நாசமானது.
தீ விபத்து ஏற்பட்டதும் வள்ளி, தனது குழந்தைகளுடன் வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் பற்றி தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.