வேப்பூரில் மருத்துவக்கல்லூரி மாணவர் விபத்தில் பலி சென்னையில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்

சென்னையில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவர் வேப்பூரில் நடந்த விபத்தில் பலியானார். மருத்துவக்கல்லூரி மாணவர் திருச்சி சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் சுஜன்(வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு தனி

Update: 2016-12-28 22:45 GMT

கடலூர்,

சென்னையில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவர் வேப்பூரில் நடந்த விபத்தில் பலியானார்.

மருத்துவக்கல்லூரி மாணவர்

திருச்சி சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் சுஜன்(வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு செல்ல சுஜன் முடிவு செய்தார்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தபோது, நிலைதடுமாறி சுஜன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்