நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளருக்கு 14 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளருக்கு நெல்லை கோர்ட்டில் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,

காப்பக உரிமையாளர்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ஜோசப்(வயது 55). இவர் அந்த பகுதியில் ஒரு காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வந்தனர்.
கடந்த 2012–ம் ஆண்டு இங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 பேர் தங்கி இருந்தனர். இந்த மாணவ, மாணவிகள் 1–வது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.
பாலியல் தொல்லை
கடந்த 18.1.2012 அன்று காப்பகத்தில் தங்கி இருந்து படித்த 2 மாணவிகள் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முத்து நாயகத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ‘‘எங்களை ஆபாச கேலி வார்த்தை பேசி ஸ்டீபன் ஜோசப் பாலியல் தொல்லை கொடுக்கிறார். எங்களால் இருக்க முடியவில்லை. எங்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வெளியே செல்ல முடியவில்லை. தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுப்பதால் படிப்பை பாதியில் விட்டு செல்ல விரும்புகிறோம். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த புகார் தொடர்பாக அப்போதையை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகோபால், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோவான் ஆகியோர் காப்பகத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இதில் ஸ்டீபன் ஜோசப், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
14 ஆண்டு சிறை தண்டனை
இதையடுத்து ஸ்டீபன் ஜோசப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சட்ட விரோதமாக அடித்து துன்புறுத்துதல், பெண்ணை அவதூறாக பேசுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஸ்டீபன் ஜோசப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆதிதிராவிட மாணவிகளின் புகார் என்பதால் இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பாக 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது ஸ்டீபன் ஜோசப் கோர்ட்டில் ஆஜரானார்.
ஸ்டீபன் ஜோசப்புக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை ஸ்டீபன் ஜோசப் வழங்குவதுடன், ரூ.46 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.