பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ,5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ரூ.5 ஆயிரம
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ,5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ரூ.5 ஆயிரம் அபராதம்நெல்லை மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பையும், மக்காத குப்பையான பிளஸ்டிக் பைகளையும் தனித்தனியாக பிரித்து பெறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்காத குப்பையான பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் பைகள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில வணிக நிறுவனங்கள் பாலித்தீன் குப்பைகளை தெருவில் வீசி வருகிறார்கள்.
தயார் செய்யப்பட்ட உணவு வகைகள், புரோட்டா கடைகள், இறைச்சி கடைகளில் பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்து உள்ளன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும்.
கழிப்பறைகள்நெல்லை மாநகராட்சி 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27,32, 32,33, 35, 36, 37, 40, 41, 42, 43, 44, 51, 52, 53, 54 ஆகிய 28 வார்டுகள் 100 சதவீதம் கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட வார்டுகளை பற்றிய கருத்துகள் இருந்தால் 10 நாட்களில் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு அந்த 28 வார்டுகளும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தவில்லை என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.