அச்சரப்பாக்கம் அருகே பூட்டை உடைத்து 4 கடைகளில் ரூ.1 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே ராமாபுரம் சாலையில் உள்ள 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்கு இருந்த பணத்தை திருடி சென்றனர். இதில் வி.மணிவண்ணன் வெல்டிங் கடையில் ரூ.4,800–ம், கன்னிவேல் சிமெண்ட் கடையில் ரூ.7,900–ம்
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே ராமாபுரம் சாலையில் உள்ள 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்கு இருந்த பணத்தை திருடி சென்றனர்.
இதில் வி.மணிவண்ணன் வெல்டிங் கடையில் ரூ.4,800–ம், கன்னிவேல் சிமெண்ட் கடையில் ரூ.7,900–ம், குறிப்பேடு கே.பி மணியின் எலெக்டிரிகல் கடையில் ரூ.71 ஆயிரமும், தேவராஜன் உரக்கடையில் ரூ.14,600–ம், மற்றும் எல்.காணராம் என்பவரின் எலெக்ரானிக்ஸ் கடையிலும் பணம் திருட்டு போனது. மொத்தம் 4 கடைகளிலும் இருந்து ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுதொடர்பாக அவர்களது புகாரின்பேரில் அச்சரப்பாக்கம் மற்றும் ஒரத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.தமிழ்வாணன் தலைமையில் அங்கு சென்று விசாரணை செய்தனர். 4 கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.