பெயிண்டர் கொலையில் 9 பேருக்கு வலைவீச்சு

பெயிண்டர் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பெயிண்டர் கொலை புதுவை உப்பளம் நேத்தாஜி நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 25). பெயிண்டர். இவர் தனது நண்பர்களான யாகூர், உதயசந்திரன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு உப்பளம் துறைமு;

Update: 2016-12-27 22:45 GMT

புதுச்சேரி,

பெயிண்டர் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெயிண்டர் கொலை

புதுவை உப்பளம் நேத்தாஜி நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 25). பெயிண்டர். இவர் தனது நண்பர்களான யாகூர், உதயசந்திரன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு உப்பளம் துறைமுக மைதானத்தில் மது குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்தோணிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்விரோதம்

போலீசாரின் விசாரணையில் கொலையாளிகள் யார்? என்பது அடையாளம் தெரியவந்துள்ளது. உடையார்தோட்டத்தை சேர்ந்த பாலு, ஆனந்து, திருவள்ளுவர் நகர் துரை, நேத்தாஜி நகர் முகேஷ் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கும், அந்தோணிராஜ்–க்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அவர்களுக்குள் தகராறும் முன்பு நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கினர்

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்