7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கூட்டுப்போராட்ட குழு சார்பில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத;

Update: 2016-12-27 23:00 GMT

புதுச்சேரி

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கூட்டுப்போராட்ட குழு சார்பில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கன்வீனர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். உதயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசுவாமி, அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், போராட்ட குழு நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், செல்வக்குமார், அய்யப்பன், எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு புதுவை அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்