விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், கறவை மாடுகளுக்கு பாண்லே தீவனத்தை வழங்க வேண்டும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்
பாகூர்,
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், கறவை மாடுகளுக்கு பாண்லே தீவனத்தை வழங்க வேண்டும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாகூரில் உள்ள பால் குளிரூட்டும் மையம் நேற்று புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்காக அவர்கள் பாகூர் தபால்நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க சிறப்பு தலைவர் கீதநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய செயலாளர் ராமமூர்த்தி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி விவசாயிகள் சங்க தலைவர் ரவி, சிறப்பு தலைவர் மாசிலாமணி, தென்னை விவசாயிகள் சங்க தலைவர் ராஜா பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாநிலக்குழு உறுப்பினர் பரசுராமன் நன்றி கூறினார்.